Tuesday, January 20, 2009

3. பதவியா? துறவியா?

தக்காணப் பீடபூமி. இந்தியாவின் மையப்பகுதியில் தொடங்கி, தென்பகுதியில் தமில் நாடு வரை நீளும் ஒரு தலைகீழ் முக்கோணம் தான் அது.

தபதி நதி பாயும் பகுதிகளைக் கொண்ட காந்தேஷ் பகுதி, அதற்குத் தென்கிழக்கில் இருந்த இன்றைய மத்திய பிரதேசத்துக்குள்பட்ட பகுதி, கர்கியைத் தலைநாகராகக் கொண்ட தௌலதாபாத் பகுதி, நான்தெரைத் தலைநகராகக் கொண்ட இன்றைய ஆந்திராவின் பகுதி - இவற்றையெல்லாம் உள்ளடங்கியதே தக்காணம்.

பின்னர் ஒளரங்காபாத் என்று ஒளரங்கசீப்பால் பெயரிடப்பட்டது.

1634-ல் ஷாஜஹான், ஒளரங்கசீப்பை தக்காணத்தில் சுபேதாராக (கவர்னர்) நியமித்தார். அப்போது தக்காணம் வருமானத்தை அள்ளிக் கொடுக்கும் வளமான பகுதியாக இல்லை. பல்வேறு விதமான பிரச்சனைகள் முற்றிப் போயிருந்தன. போர்களங்களும் காத்திருந்தன.

உத்கீர், பக்லானா, அவுஸா போன்ற தக்காணத்தின் சில முக்கிய பகுதிகளைக் கைப்பற்றினார். 1637-ல் ஒளரங்கசீப், நவாப் பாய் பேசம் என்ற ரஜபுத்திர இளவரசியைத் திருமணம் செய்து கொண்டார். இரண்டாவதாக, பாரசீக அரச குடும்பத்தைச் சார்ந்த தில்ராஸ் பானு பேகத்தை திருமணம் செய்து கொண்டார்.

ஒளரங்கசீப்பின் நிர்வாகத்தில் வருமானமே இல்லாமல் இருந்த தக்காணப் பகுதிகளிலிருந்து வருவாய் வர ஆரம்பித்தது. இந்த சமயத்தில் தாரா, ஷாஜஹானுக்கு மிகவும் வேண்டிய பிள்ளையாகத் தன்னை வளர்த்துக் கொண்டிருந்தார் எந்த விஷயத்திலும் முதல் உரிமை தனக்குக் கிடைக்கும்படி பார்த்துக் கொண்டார்.

ஏகப்பட்ட பிரச்சனைகள், எப்பொது வேண்டுமானாலும் யாரும் பொருக்கு கிளம்பி வரலாம் என்ற நிலை. மன அமைதிக்காக ஒளரங்கசீப் தேர்ந்தெடுத்த வழி ஆன்மீகம். தினமும் ஐந்து வேளை தவறாமல் தொழுகை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் குர்-ஆன். சிறு வயதிலேயே அவருக்கு குர்-ஆன் மீது தனிப் பிரியம் ஏற்பட்டது. தன் அழகான கையெழுத்தால் குர்-ஆன் முழுவதையும் எழுதுவது, அவருக்கு மிகவும் பிடித்தமான விஷயம்.

அரச குடும்பத்தைச் சார்ந்திருந்தாலும், சக்தி வாய்ந்த தளபதியாக இருந்தாலும், ஒளரங்கசீப் ஆடம்பரத்தை விரும்பவில்லை.

இஸ்லாம் மத நெறிகளின்படி மிகவும் எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டார். சில சமயங்களில் ஃபகீர் (பிச்சைக்காரர்) போல அலைந்தார். அனாலும் நிர்வாகத்தில் சரியாக செயல்பட்டார்.

1644. ஆக்ரா மாளிகையில் கையில் மெழுகுவர்த்தி ஏந்திச் சென்று கொண்டிருந்தார் இளவரசி ஜஹானாரா. திடீரென்று கையிலிருந்து தவறி விழுந்தது மெழுகுவர்த்தி. ஜஹானாராவின் ஆடையில் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.

அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். உடலில் பல இடங்களில் தீக்காயம். ஆறுவதற்குப் பல மாதங்கள் பிடித்தன.

ஒளரங்கசீப்புக்கு இந்த விஷயம் மெதுவாகத் தான் தெரிய வந்தது. கேள்விப்பட்ட உடன் அக்ராவுக்கு கிளம்பினார். ஜஹானாராவைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

அப்போது தன்தந்தை ஷாஜஹானையும் சந்தித்தார். தக்காணப் பகுதி நிலவரங்களையெல்லாம் விரிவாகச் சொன்னார்.

அனால் ஷாஜஹான் சரியாகப் பெசவில்லை.

'தந்தையே! என்ன ஆயிற்று?'

'என்ன ஆயிற்று என்றா கேட்கிறாய்? உன் சகோதரிக்கு இப்படி ஒரு கோரமான விபத்து நடந்து ஒரு மாதம் ஆகப் போகிறது. நீ அது பற்றி எந்த கவலையும் இல்லாமல் நிதானமாகப் பார்க்க வருகிறாய்? உன் அன்பு அவ்வளவு தானா?'

ஒளரங்கசீப் பதில் எதுவும் சொல்லவில்லை. என்ன சொன்னாலும் எடுபடாது என்பது அவருக்குத் தெரிந்த விஷயமே. மௌனமாக அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

இதே நேரத்தில் தாரா, ஷாஜஹானிடம் பேச வந்தார்.

'தந்தையெ, ஒளரங்கசீப்பை நம்பி தக்காணத்தின் நிர்வாகப் பொறுப்பை வழங்கியிருக்கிறீர்கள். ஆனால் அவனோ அங்கே ஒரு பிச்சைக்காரன் போல திரிகின்றானாம். அவனுக்கு அந்தப் பதவிமேல் விருப்பமில்லையாம். வாளையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, மதத்துறவியாக மாறப்போகிறானாம், அவனது நண்பர்கள் சொல்கிறார்கள். அவன் இப்படி பொறுப்பில்லாமல் இருந்தால், நம் பேரரசை எப்படிக் காப்பாற்ற முடியும்?'
ஷாஜஹானுக்கு ஆத்திரம் தலைக்கேறியது. உடனே ஒளரங்கசீப்பை கவர்னர் பதவியிலிருந்து நீக்கினார். விஷயமறிந்த ஒளரங்கசீப் மனதளவில் மேலும் பாதிக்கப்பட்டார்.

No comments: