Tuesday, January 20, 2009

6. சிவாஜியின் பழக்கூடைகள்

ஒளரங்கசீப்பின் வாழ்க்கை வரலாற்றைப் பார்க்கும் போது அதில் தவிர்க்கவே முடியாத பாத்திரம், சத்ரபதி சிவாஜி. மராட்டிய வீரர்.

யார் இந்த சிவாஜி? உண்மையிலேயே வீரரா? அவரது வெற்றிகள் எப்படிப்பட்டவை? ஒளரங்கசீப்புக் கண்ணில் தூசி போல உறுத்தியவாறு அல்லது ஒளரங்கசீப்பினால் காணமல் போனவரா?

பிஜப்பூரை ஆண்டு வந்த சுல்தான் ஆதில்ஷா. அவரது அரசாங்காத்தில் உயர்பதவி வகித்தவர் ஷாஜி. சிவாஜியின் தந்தை.

சிவாஜி தன் வீரத்தாலும், சாதூர்யத்தாலும் பல்வேறு தந்திரங்களாலும் பிஜப்பூருக்கு அருகிலிருந்த பல்வேறு கோட்டைகளை பிடித்திருந்தார். இது ஆதில்ஷாவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

'உன் மகனை வரச்சொல், என்று ஷாஜியிடம் கட்டளையிட்டார். அனால் தன் தந்தை அழைத்தும் சிவாஜி, ஆதில்ஷாவைச் சந்திக்கச்செல்லவில்லை. அதனால் ஷாஜி கைதுசெய்யப்பட்டுச் சிறைக்காவலில் வைக்கப்பட்டார்.

அந்தப் பகுதியில் ஓரளவு இடங்களைக் கைப்பற்றியிருந்த சிவாஜி பேரரசர் ஷாஜஹானுக்குத் தூதனுப்பினார்.

'நானும் என்னைச் சார்ந்தவர்களும் முகலாயப் பேரரசருக்குக் கட்டுப்படுகிறோம். பிஜப்பூர் மன்னரிடமிருந்து என் தந்தையை மீட்டுத்தாருங்கள்.'

விஷயம் ஆதில்ஷாவுக்கும் சென்றது. அவர் ஷாஜியை விடுதலைச் செய்தார். சிறிது நாள்களில் ஆதில்ஷா நோய்வாய்ப்பட்டார். சிகிச்சைகள் பலனின்றி 1656, நவம்பரில் மரணமடைந்தார். அவரது அலி ஆதில்ஷா, மன்னரானார். ஆனால் அனுபவமோ, திறமையோ இல்லாத அவரால், அரசை நிர்வகிக்க முடியவில்லை.

இந்த நேரத்தில் தான் (1657) ஒளரங்கசீப் பிஜப்பூர் மீது படையெடுத்தார் என்பதை ஏற்கெனவே பார்த்தோம். அப்போது சிவாஜி, ஒளரங்கசீப்புக்கு ஆதரவாக இருந்தார். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கொள்கை, போர் முழுவதுமாக முடிந்திருந்த நிலையில் தான், ஷாஜஹான் உடல்நிலை சரியில்லை என்றும், தாரா ஆட்சிக்கு வரப்போகிறார் என்றும் செய்திகள் வந்தன. ஒளரங்கசீப், ஆக்ராவை நோக்கிச் செல்ல வேண்டிய கட்டாயம் உண்டாயிற்று.

பிஜப்பூர் தப்பியது, முகலாயர்களை நம்பியிருந்த சிவாஜியும் பதுங்கினார்.

அப்போது பிஜப்பூர் அரசுக்கு ஒரே நம்பிக்கையாக இருந்தவர் தளபதி அஃப்சல் கான். சிவாஜிக்கும் தெரியும். அவரை வெல்வது எவ்வளவு கடினமான காரியம் என்று. எனவே, தந்திரம் நிறைந்த ஒரு திட்டத்தை தீட்டினார்.

அந்த சமயத்தில் தன்னைத் தாக்குவதற்காக அஃப்சல்கான் பெரும் படையோடு வருவதாக சிவாஜிக்குத் தகவல் வந்தது. 'இரண்டு வாரங்கள் கழித்து நாம் நேரில் சந்திப்போம்', என்று அஃப்சல்கானுக்குக் கோரிக்கை அனுப்பினார் சிவாஜி. அதை அவர் ஏற்றுக்கொண்டார்.

சந்திப்புக்கான நாள், நேரம், இடம் குறிக்கப்பட்டது. குறிப்பிட்ட நாளில் சிவாஜி தனியாளாக அஃப்சல்கானைச் சந்திக்க அவர் தங்கியிருந்த கூடாரத்திற்குச் சென்றார். சமாதனம் தான் பேச வருகிறார் என்ற எண்ணத்தில், அஃப்சல்கான் எந்த ஆயுதங்களையும் தன்னோடு வைத்துக் கொள்ளவில்லை. பாதுகாவலர்களையும் வெளியே அனுப்பிவிட்டிருந்தார்.

இருவரும் மரியாதை நிமித்தமாகத் தழுவினர். அடுத்த நொடியே இருவரும் சண்டைப் போட ஆரம்பித்தனர். சண்டையின் இருதியில் அஃசல்கான் கொல்லப்பட்டார்.

தன்னிடமிருந்த சங்கை எடுத்து ஊதினார் சிவாஜி. அந்தச் சத்தத்தைக் கேட்ட உடனேயே காட்டுக்குள் ஆங்காங்கே ஒழிந்திருந்த அவரது படையினர், களத்தில் இறங்கித் தாக்கத் தொடங்கினர். இந்த எதிர்பாராத கொரில்லாத் தாக்குதலை பிஜப்பூர் படையினர் சமாளிக்க முடியாமல், ஏராளமான உயிரிழப்புகளைச் சந்தித்தனர்.

அந்தத் தாக்குதல் ஆறு மணி நேரங்களுக்கு நீடித்தது.

அந்த மோதலுக்குப் பின், பிஜப்பூர் படைகளுக்கும், சிவாஜியின் படைகளுக்கும் அடிக்கடி போர்கள் நடந்தன. ஒரு கட்டிடத்தில் பிஜப்பூர் அரசு, சிவாஜியுடன் சமாதனப் பேச்சு வார்த்தை நடத்தி, அவரை ஒரு குறிப்பிட்ட பகுதியின் ஆட்சியாளராக, சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தது.

அநதப்பகுதிகளில் தக்கணாத்தைச் சார்ந்த சில பகுதிகளும் அடங்கும். சிவாஜி, ஒளரங்கசீப்பின் ஆட்சியின் கீழிருந்த ஒளரங்காபாத் வரையிலான பகுதிகளைக் கைப்பற்றினார்.

சிவாஜியை அடக்க ஒளரங்கசீப், தன் உறவினரும், சிறந்த தளபதியுமான ஷெயிஸ்டகானைத் தாக்காணப்பகுதிகளுக்கு அனுப்பினார். பெரும் படைகளுடன் வந்த ஷெயிஸ்டகான் கல்யாண் என்ற கோட்டையை கைப்பற்றினார். அதே சமயம் சிவாஜி, முகலாயர்களுடன் போரடி, பிரபல்கட் கோட்டையை ஆக்ரமித்தார்.

ஆனால், பலம்வாய்ந்த முகலாயப் படைகளின் முன்னேற்றத்தை சிவாஜியினால் ஒன்றும் செய்ய இயலவில்லை. தொடர்ந்து மராட்டியப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டிருந்தார் ஷெயிஸ்டகான். பூனா அவர் வசமானது. அங்கிருந்த லால் மஹாலில் கிட்டத்தட்ட ஒருவருட காலம் தங்கியிருந்தார் ஷெயிஸ்டகான்.

சிவாஜியின் தந்திர முளை, திட்டம் போட ஆரம்பித்தது. வழக்கமான சிந்தனைகள் தான். போரிட்டு வெல்ல முடியாது, தனியாக இருக்கும் தளபதியைக் கொல்ல வேண்டும்.

1663, ஏப்ரல், 5. பூனா நகருக்குள் அந்நியர்கள் நுழையவே முடியாதபடியான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தது. எனவே, போலியாக ஒரு திருமண ஊர்வலமொன்றை நடத்தினார் சிவாஜி. அதில் மாறுவேடமிட்ட கூட்டத்தோடு கூட்டமாக கலநதுக்கொண்டார். மராட்டிய வீரர்களும் மாறுவேடத்தில் இருந்தனர்.

வாசலில் இருந்த காவலாலிகளிடம் ஊர்வலத்தை உள்ளே அனுமதிக்குமாறு சாதூர்யமாக பேசினார். அனுமதி கிடைத்தது. அவர்கள் பூனா நகருக்குள் நுழைந்தனர். சிவாஜி, பதுங்கிப் பதுங்கிச் சென்று, லால் மஹாலின் பின் வாசல் வழியாக உள்ளே புகுந்தார். ஷெயிஸ்டகானின் அறையைத் தேடிக் கண்டுப்பிடித்தார். அவரைக் கண்ட மறுநொடியே வாளை உருவி வெட்டினார்.

ஷெயிஸ்டகான் சற்று சுதாரித்துக் கொண்டார். தலையைக் குனிந்து அந்த வாள் வீச்சை கையால் தடுத்தார். அவரது மூன்று விரல்கள் துண்டாகிப் போயின. மேலும் ஒரு நொடியும் தாமதிக்காத அவர், ஜன்னல்வழியே, ஏறிக் குதித்துத் தப்பினார். அவருடைய பணியாளர்கள் அவரை பத்திரமான இடத்திற்க்குக் கொண்டு போனார்கள்.

சிவாஜியும், அவரது படைவீரர்களும் பூனாவுக்குள் சிறது தாக்குதல்களை நடத்திவிட்டுத் தப்பித்துச் சென்றனர். அந்த தாக்குதலுக்குப் பிறகு, ஒளரங்கசீப், ஷெயிஸ்டகானை பூனாவிலிருந்து வங்காளத்திற்கு மாற்றினார்.

ஷெயிஸ்டகான் பிடித்துவைத்திருந்த சூரத் நகரின் மேல் 1664-ல் டையெடுத்து வெற்றிப் பெற்றார் சிவாஜி. இந்தியாவின் பெரும் வணிகநகரமான சூரத்தில் சிவாஜியின் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்தன.

எனவே, சிவாஜியை ஒடுக்க ஒளரங்கசீப், ஜெய்சிங் என்ற புதிய தளபதியை நியமித்தார். பெரும் படையுடன் ஜெய்சிங் வருவதை அறிந்த சிவாஜி வழக்கம் போல சமாதானத் தூது அனுப்பினார். ஆனால் ஜெய்சிங் அதை நிராகரித்தார்.

1665-ல் சிவாஜியின் பிடியில் இருந்த புரந்தர் கோட்டை முகலாயப்படையினரால் கைப்பற்றப்பட்டது. அமைதிப்பேச்சு வார்த்தை நடத்த விரும்புவதாக மீண்டும் சிவாஜி செய்தி அனுப்பினார். ஜெய்சிங் ஒப்புக் கொண்டார்.

பேச்சு வார்த்தை நடந்தது. இருபத்திமூன்று கோட்டைகளையும், நான்கு லட்சம் பெருமானமுள்ள தங்கத்தையும் முகலாயர்களுக்குக் கொடுப்பதாகக் கூறினார் சிவாஜி. மேலும் தன் மகன் சாம்பாஜியை முகலாயப் படையில் பணியாற்ற அனுப்புவதாக் கூறினார். தானும் தேவைப்பட்டால் முகலாயப்படைகளுக்கு உதவுவதாக உறுதியளித்தார்.

ஜெய்சிங் அவரது வேண்டுகோள்களை ஏற்று, ஒளரங்கசீப்புக்கு கடிதம் எழுதினார். ஒளரங்கசீப்பும் அனுமதி கொடுத்தார். மேலும் சிவாஜிக்குப் பரிசாகப் பட்டாடை ஒன்றை அனுப்பினார். சிவாஜியின் மகன் சாம்பாஜிக்கு ஐயாயிரம் (5,000) குதிரைகளைக் கொண்ட மன்ஸபத் பதவி வழங்கப்பட்டது.

அதற்குப்பின் சிவாஜியும் அவரது மகன் சாம்பாஜியும் நான்காயிரம் படை வீரர்களுடன் ஒளரங்கசீப்பைச் சந்திக்க ஆக்ராச் சென்னர். அந்தப் பயணச் செலவுக்கான தொகையும் அவருக்கு வழங்கப்பட்டது.

ஆக்ரா சென்றடைந்த சிவாஜி, ஒளரங்கசீப்பின் அமைச்சர்களால் முறைப்படி வரவேற்க்கப்பட்டார். ஒளரங்கசீப்புடனான ச்நதிப்புக்கான நாள், நேரம் குறிக்கப்பட்டது.

அந்த நாளில் சிவாஜி, அவைக்குச் சென்றார். 'மன்னர் சிவாஜியை, வருக!, என்று ஒளரங்கசீப் வரவேற்றார். அதன் பின் சிவாஜி, சிலப் பரிசுப் பொருள்களை அளித்துவிட்டுத் தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் சென்று அமர்ந்தார்.

சிவாஜிக்கு 5,000 குதிரைகள் கொண்ட மனஸபத்தார் பதவி வழங்கப்படுவதாக அறிவித்தார் ஒளரங்கசீப். ஆனால், தனக்கு 10,000 குதிரைகளைக் கொண்ட மன்ஸபத்தார் பதவி வழங்கப்பட வேண்டும் என்று குரல் எழுப்பினார் சிவாஜி. அவரைக் காவலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டது.

சிவாஜி ஜெயபுரி மாளிகையில் அடைக்கப்பட்டார். அதைச் சுற்றிலும் முகலாய வீரர்கள் காவலுக்குப் போடப்பட்டனர். சிவாஜி அவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்க ஆரம்பித்தார்.

ஒளரஙகசீப்பிடம் அனுமதி வாங்கி, தன்னுடன் அழைத்துவந்தப் படைவீரர்களை திருப்பி அனுப்பினார். தன் மகனையும் ஓரிரு அதிகாரிகளையும் ம்டுமே தன்னுடன் வைத்துக் கொண்டார்.

நாளடைவில் ஜெயபுரி மாளிகையில் சிவாஜிக்குப் போடப்பட்டிருந்த காவல் குறைக்கப்பட்டது. அவர், முகலாய அதிகாரிகளுடனும், அமைச்சர்களுடனும் நன்றாகப் பழக ஆரம்பித்தார். தன் மராட்டிய சமையல் காரர் சமைத்த உணவுவகைகளை அவர்களுடைய மாளிகைக்கு அனுப்ப வைத்தார். பதிலுக்கு அவர்களும் அன்பு செய்தனர்.

ஆரம்பத்தில் அந்த கூடைகளும் ஜாடிகளும் பாதுகாவலர்களால் கவனமாகப் பரிசோதிக்கப்பட்டன. நாளடைவில் கவனம் குறைந்துப் போனது. இடையில் சிவாஜிக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. ஒளரங்கசீப் தக்க மருத்துவ உதவிகள் செய்தார்.

தன் உடல்நிலைச் சரியாவதற்காகச் சில தானங்களைச் செய்ய வேண்டியருப்பதாகச் சொல்லி அனுமதிக் கேட்டார் சிவாஜி. அனுமதி கிடைத்தது. அதன் படி, தினமும் சிவாஜிக்கு கூடைக்கூடையாக இனிப்புகளும், பழங்களும் வந்தன. அவற்றை வைத்து பூஜைகள் செய்தார். பின் துறவிகளுக்கும், ஏழைகளுக்கும் தானமாக அனுப்பினார்.

இந்தச் செயல் பல நாள்கள் தொடர்ந்தன. ஒரு நாள், சிவாஜி தன் மோதிரத்தை ஹிராப்பர் என்பவரின் கையில் அணிவித்தார். அவரை தன் படுக்கையில் படுக்கச் சொல்லி, ஒரு போர்வையால் மூடினார். மோதிரம் அணிந்த கை மட்டும் போர்வைக்கு வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. சிவாஜியும், சாம்பாஜியும் பூஜைக்காக வந்த இனிப்புக் கூடைக்குள் ஒளிந்து கொண்டார்கள்.

கூடைகள் வெளியே எடுத்துச் செல்லப்பட்டன. பாதுகாவலர்கள் அவற்றைச் சோதனைச் செய்யவில்லை. சிவாஜி ஜெயபுரி மாளிகையிலிருந்து வெளியேறினார். தன் தாடி மீசையை மழித்துவிட்டு ஆக்ராவிலிருந்தும் தப்பித்தார். அங்கிருந்து வழியெங்கும் முகலாயர்களின் கண்களில் படாமல் தன் இடமான ராஜ்கட்டுக்கு வந்து சேர சிவாஜிக்குப் பல மாதங்கள் பிடித்தன.

1670-லிருந்து 1674 வரை தன் ராஜியத்தை கொஞ்சம் கொஞ்சமாக விஸ்தரித்தார் சிவாஜி. முகலாயர்களுடன் போரிட்டு, இழந்த சில பகுதிகளை மீட்டுக் கொண்டார்.

1674, ஜூன் 6-ம் தேதி, ராஜகட் கோட்டையில் சத்ரபதியாக முடிசூட்டிக் கொண்டார். 'சத்ரபதி', என்றால் ஷத்திரியர்களின் அரசன், என்று பொருள்

1680-ல் சிவாஜி காய்ச்சல் வந்து இறந்து போனார்.

'பத்தொன்பது ஆண்டுகளாக சிவாஜியை எதிர்த்துப் போர் புரிந்திருக்கிறேன், அவர் மிகச் சிறந்த வீரர்', - சிவாஜியின் மறைவிற்கு ஒளரங்கசீப் அளித்த செய்தி இது தான்.

சிவாஜியின் மகன் சாம்பாஜி, மராட்டிய மன்னராக முடிச்சூட்டிக் கொண்டார். மராட்டியர்களிடம் இழந்த பகுதிகளை இனியாவது மீட்கலாம் என்று முகலாயப்படைகள் கிளம்பின. சிவாஜி அளவுக்கு சாம்பாஜி வீரம் நிறைந்தவராக இல்லாவிட்டாலும், முகலாயப்படைகளால் மராட்டியர்களைச் சமாளிக்க முடியவில்லை.

இந்த நேரத்தில் ஒளரங்கசீப்பின் மகன் மஹம்மது அக்பர், அவரைவிட்டுப் பிரிந்து சாம்பாஜியுடன் சென்று நேர்ந்தான். தம்மிடமிருந்த படைகளை மராட்டியப்படைகளுடன் இணைத்துக் கொண்டான்.

இதற்கு மேலும் டெல்லியிலும், ஆக்ராவிலும் உட்கார்ந்து கொண்டிருந்தால் பயனில்லை என்று உணர்ந்த ஒளரங்கசீப், தக்காணப் பகுதிக்கு இடம் மாறினார். அங்கிருந்தபடியே நிர்வாகம் செய்ய ஆரம்பித்தார். முகம்மது அக்பர் பாரசீகத்துக்கு (ஈராக்) தப்பி ஓடினான்.

ஒளரங்கசீப் தொடர்ந்து மராட்டியர்களுடன் போரிட்டார். ஒன்பது ஆண்டுகள் கடந்தன. ஆனால் அவர்கள் வசமிருந்த ஒரு கோட்டையைக் கூடக் கைப்பற்ற முடியவில்லை. 1689-ல் சாம்பாஜி முகலாயப்படையினரால் பிடிக்கப்பட்டு, கொல்லப்பட்டார்.

அதற்குப்பிறகு அவரது சகோதரர் ராஜாராம் தன்னை மன்னராக அறிவித்துக் கொண்டார். ஆனால், மராட்டியர்களால் ஒரே தலைமையின் கீழ் செயல்பட முடியவில்லை. சிறு சிறு படைகளாக ஆங்காங்கே முகலாயர்களுடன் மோதிவந்தனர். இந்த மோதல் அடுத்த பத்து ஆண்டுகளுக்குத் தொடர்நதது.

பல இடங்கள் முகலாயர்களிடமும், மராட்டியர்களிடமும் கைமாறிக் கொண்டேயிருந்தன. சில முறை ஒளரங்கசீப் மீதான கொலை முயற்சிகளும் நடந்தன. அவற்றிலிருந்து அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பினார் அவர்.
ஒளரங்கசீப்பின் காலத்துக்குப் பின்னரே மராட்டியர்களால் ஒரு தலைமையின் கீழ் ஒன்றிணைந்து செயல்பட முடிந்தது. அப்போது சிவாஜியின் பேரன் ஷாகு மராட்டிய மன்னராக முடிசூட்டிக் கொண்டார்.

No comments: